பெண்ணுக்கு அந்தரங்க உறுப்பை காண்பித்தவருக்கு பிணை: பூச்சியுடன் நீதிமன்றம் வந்ததால் சம்பவம்!

பெண்ணொருவருக்கு தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து, பாலியல் சேட்டையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதானவருக்கு, ஒரு பூச்சியினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா மேலதிக நீதிவான் எம்.மகேந்திரராஜா, சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவித்தார்.

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு நபர், தனது சாரத்தை களைந்து, பெண்ணொருவருக்கு தனது அந்தரங்க உறுப்பை பாண்பித்தார், பெண்ணுடன் பாலியல் சேட்டையில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்பட்டது.

முறைப்பாட்டையடுத்து, ஆசாமியை பொலிசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கம்பஹா மேலதிக நீதிவான் முன்னிலையில் வந்தபோது, ஆசாமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பூச்சியொன்றை போத்தலில் அடைத்து எடுத்து வந்தார். இந்த பூச்சி, அவரது சாரத்துக்குள் நுழைந்தமையினால்தான் அவர் சாரத்தை களைந்தார், அவர் தீய நோக்கத்துடன் களையவில்லையென சட்டத்தரணி குறிப்பிட்டார்.

எனினும், பொலிசார் அதை மறுத்து, முறைப்பாட்டாளர் அந்த சமயத்தில் எடுத்த வீடியோ காட்சிகள் அடங்கிய சிடியை மன்றில் சமர்ப்பித்தனர்.

ஆசாமியை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவித்த நீதிவான், வழக்கை ஒக்ரோபர் மாதத்திற்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here