துனிசிய பிரதமர் பதவிவிலகல்

துனிசியா பிரதமர் எலிஸ் பக்பாக் பதவி விலகி உள்ளார். அவர் தனது பதவிவிலகல் கடிதத்தை ஜனாதிபதி கைஸ் சையத்திடம் அளித்தார்.

நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்து, ஜனவரி மாதம்தான் அவர் பிரதமராக பதவியேற்றார். ஆனால் அவருக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்கியதால் பதவியை துறந்துள்ளார்.

ஐந்து மாதங்களிற்கும் குறைவாக பதவியில் இருந்த அவர், மேலும் குழப்பங்களை அதிகரிக்காமல் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் வெளிப்பட்ட ஊழல் மோசடியொன்றில் பிரதமருக்கு சொந்தமான நிறுவனமும் தொடர்புடைய ஆவணங்கள் வெளியானதை தொடர்ந்து இந்த நெருக்கடி ஏற்பட்டது.

துனிசியா அதன் 2011 பிராந்திய அரபு வசந்த புரட்சியால் தூண்டிய எழுச்சிகளுக்குப் பின்னர் ஜனநாயக மாற்றத்திற்கான ஒரு அரிய வெற்றிக் கதை என்று புகழப்பட்டது.

ஆனால் அதன் தலைவர்கள் துனிசிய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய போராடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here