தாஜூடீன் கொலை விவகாரத்தில் முக்கிய சந்தேகநபர் காலமானார்!

ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான, கொழும்பு முன்னாள் தலைமை நீதித்துறை அதிகாரி, பேராசிரியர் ஆனந்த சமரசேகர காலமானார். கொழும்பு மேலதிக நீதிவான் மன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (16) இந்த தகவலை வழங்கியது.

நீதிமன்றத்தில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் திலன் ரத்நாயக்க, இதனை அறிவித்தார்.

அத்துடன், பிறிதொரு சந்தேகநபரான முன்னாள் மூத்த மூத்த டி.ஐ.ஜி அனுர சேனநாயக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, ரக்பி வீரர் தாஜுதீன் கொலை வழக்கில் முன்னாள் டி.ஐ.ஜி அனுர சேனநாயக்க, ஆதாரங்களை மறைத்ததாக கொழும்பு உயர் நீதிமன்றம் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தது.

நவம்பர் 19 ம் திகதி இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பான அறிக்கையை முன்வைக்க  சிஐடிக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here