டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வார நாட்களில் கிளினிக் சிகிச்சைக்காக வருபவர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருந்தோட்ட மக்களின் வைத்திய வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசாங்கத்தின் நிதிதவியுடன் இந்த வைத்தியசாலை அமைக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் சேவையை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை சந்திக்கிறார்கள்.
அதிகாலை 4 மணிக்கு வந்து வரிசையில் நின்று இடம்பிடிக்க வேண்டியுள்ளதாகவும், அப்படி நின்று இடம்பிடித்தாலும், வைத்திய பரிசோதனையின் போது இடம்பெறும் கெடுபிடிகளால் உரியமுறையில் சிகிச்சை பெற முடியவில்லையென அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையை சூழ துர்நாற்றம் வீசுகிறது. அதனால் அந்த பகுதியில் இருக்க முடியவில்லையென்றும் தெரிவிக்கின்றனர்.