இராணுவ உணவகத்தின் பெயர்ப்பலகைகளை சேதமாக்கிய மர்ம நபர்கள் யார்?

வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலுள்ள இராணுவ உணவகத்தின் பெயர்ப்பலகை இரண்டு நேற்று இரவு முதல் சேதமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

நேற்று இரவு முதல் பிரதான கண்டி வீதி தாண்டிக்குளம் பகுதியிலுள்ள பேயாடிகூழாங்குளம் இராணுவ முகாமிற்கு சொந்தமான இராணுவ உணவகத்திற்கு வீதியின் அருகே அண்மையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை இரண்டு அடுத்தடுத்து சேதமாக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது .

இந்நடவடிக்கை விஷமிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதற்கான தடையங்கள் எவையும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here