இரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து தடுமாற்ற ஆரம்பம்!

இங்கிலாந்து வீரர் ஜோ டென்லியின் டெஸ்ட் வாழ்க்கை ஏறக்குறைய முடிந்து விட்டது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று தொடங்கிய ஓல்ட் ட்ராபர்ட் டெஸ்ட் போட்டிக்கு டென்லி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதே போல் ஜேம்ஸ் அண்டர்சன், மார்க் உட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஜோ ரூட் கப்டனாக அணிக்குத் திரும்பியுள்ளார்.

முதல் டெஸ்ட் தோல்வியிலிருந்து மீள இங்கிலாந்து சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. அண்டர்சன் காயத்திலிருந்து மீண்டு வந்து முதல் டெஸ்ட் போட்டியில் 40 ஒவர்களை வீசினார். அதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் அவர் பந்துவீச்சும் பந்து பழசானவுடன் நேர் நேர் தேமாவாகி துடுப்பாட்டக்காரர்கள் செட்டில் ஆகிவிடுகின்றனர்.

அண்டர்சன், மார்க் உட்டிற்குப் பதில் சாம் கரன் மற்றும் ஓலி ரொபின்சன் என்ற வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆடும் லெவனில் பிராட், சாம் கரன் இடம்பிடித்துள்ளனர்.

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள், முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் ஆடி வரும் இங்கிலாந்து 46.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இரண்டாவது டெஸ்டின் ஆரம்பத்திலும் கருப்பின மக்களின் உரிமை போராட்டத்திற்கு ஆதரவாக இரு அணி வீரர்களும் முழங்காலில் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here