வியர்வையின் மூலம் கொரோனா நோயாளிகளை கண்டறிய மோப்ப நாய்களிற்கு பயிற்சி

மனிதர்களின் வியர்வையை வைத்து கொரோனா நோயாளிகளை மோப்ப நாய்கள் கண்டறிவதற்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

சிலி நாட்டில் கொரோனா பாதிப்பு உடையவர்களை கண்டறிய மோப்ப நாய்களுக்கு அந்நாட்டு பொலிசார் பயிற்சி அளித்து வருகின்றனர். பொதுவாக போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களைக் கண்டறிய அல்லது காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படும் நான்கு மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிப்பதாக சிலி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வைரசுக்கு வாசனை இல்லை என்றாலும், அது உடலில் ஏற்படுத்தும் வேதியியல் மாற்றத்தால் மக்களின் வியர்வையில் வித்தியாசமாக வாசனை ஏற்படுகிறது என்று இத்திட்டத்தின் கால்நடை தொற்றுநோயியல் பேராசிரியர் பெர்னாண்டோ மார்டோன்ஸ் தெரிவித்தார்.

ஓகஸ்ட் மாதத்திற்குள் நாய்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், எனவே ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் ரோந்து செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here