அங்குலான பொலிஸ் நிலைய பகுதியில் பதற்றம்!

அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டது.

அங்குலான லுணாவ பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பொலிஸாரினால் நடத்தப்பட்ட சோதனையின் போது முச்சக்கரவண்டியில் சென்ற சிலருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மீனவர் ஒருவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குழுவொன்று அமைதியின்மையில் ஈடுபட்டது.

பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு தாக்குதலையும் மேற்கொண்டனர்.

இந்நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டனர். விசேட அதிரடிப்படையினர் மேலதிக பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here