அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் இயங்கும்!


தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்தார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவ தளபதியும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் உறுதியளித்துள்ளனர். இதன்படி பாடசாலைகள் மற்றும் பரீட்சைகள் திட்டமிட்டடி நடத்தப்படும் என்று அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

கல்வி செயற்பாடு மற்றும் பரீட்சைகள் தொடர்பாக நேற்று அமைச்சரவை கூட்டத்திலும் விவகாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகுவதை வைத்து, எதிர்க்கட்சிகள் மாணவர்களை அச்சத்தில் ஆழ்த்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டு,கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் இராணுவத் தளபதி இருவரும் அரசாங்கத்திற்கு உத்தரவாதம் அளித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here