2 நாளில் சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய வர்த்தமானி!


அடுத்த இரண்டு நாட்களுக்குள் பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பத்திரிகையாளர்களிற்குமிடையில் இன்று காலை அலரி மாளிகையில் நடந்த கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட வழிகாட்டுதல்கள் சட்டமா அதிபர் தம்புல டி லிவேராவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார். இது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று பரிந்துரைகளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த பரிந்துரைகள் கிடைத்தவுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களைக் கொண்ட வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாததால் பொதுத் தேர்தலை நடத்துவதில் சிரமங்கள் எழுந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here