குறுமன்வெளி துறையில் பொருத்தப்பட்ட அரசியல் மின்குமிழை அகற்ற தீர்மானம்!

குறுமன்வெளி துறையடியில் கல்லாறு வட்டார பிரதேச சபை உறுப்பினரால் அரசியல் நோக்குடன் பொருத்தப்பட்ட மின்குமிழை அகற்றி பொதுவானதாக பிரதேச சபையினால் பொருத்துவதற்கான சபையில் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் இருபத்தொன்பதாவது அமர்வு பிரதேச சபை தவிசாளார் ஞ.யோகநாதன் தலமையில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதன் போது குறுமன்வெளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் இளங்கோவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்படி குறுமன்வெளி வட்டார உறுப்பினர் தனது முறைப்பாட்டினை முன்வைத்து சபையில் உரையாற்றுகையில், குறுமன்வெளி கிராமத்தினை பொறுத்தாளவில் நான் ஐம்பதற்கும் மேற்பட்ட மின் குமிழ்களைப் பொருத்தியுள்ளேன். இருந்தும் பெரியகல்லாறு வட்டார உறுப்பினர் எனக்கு தெரியாமல் குறுமன்வெளி மண்டூர் போக்குவரத்து துறையில் தேர்தலை மையப்படுத்தி அவர் சார்ந்த கட்சியை பலப்படுத்தும் நோக்குடன் மின் குமிழ் ஒன்றினை பொருத்தியுள்ளார். தேர்தல்காலம் என்பதனால் என்மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனால் நான் அவமரியாதைகளுக்கு உட்பட்டு வருகின்றேன். இதனை நிவர்த்தி செய்வதற்கு இச் சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபையிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

இதனை குறுக்கிட்ட பெரியகல்லாறு வட்டார உறுப்பினர், தங்களது வாட்டாரத்தை சார்ந்த சிலர் என்னிடம் கோரிக்கையினை முன் வைத்தனர். அதனையே நிறைவேற்றினேனே தவிர இதில் எவ்வித அரசியல் நோக்கமுமில்லை என தெரிவித்தார்.

இதனை குறிக்கீடு செய்த ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள் எதுவாக இருந்தாலும் அப்பிரதேச உறுப்பினருக்கு தெரியப்படுத்தாமல் நீங்கள் மேற்கொண்டமையானது பிழையானதொரு செயற்பாடாகும் எனவே இவரால் பொருத்தப்பட மின் குமிழை அகற்றி அவ்விடத்தில் பிரதேச சபையால் பொதுவானதொரு மின்குமிளை பொருத்த வேண்டும் என எனைய உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கருத்தினை முன்வைதனர் இதனை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டதற்கமைய மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here