வவுனியாவில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்!


வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவரின் நினைவுத் தூபிக்கு முன்பாக இன்று காலை வவுனியா முச்சக்கரவண்டி சங்கத்தின் அனுசரணையில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார் தலைமையில் வவுனியா நகரசபையின் மேற்பார்வையில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இடம்பெற்றது .

சோமசுந்தரப்புலவரை நினைவுகூரும் முகமாகவும் தமிழர் பாரம்பரிய நிகழ்வாகவும் ஆடிப்பிறப்பு தினத்தில் வருடாவருடம் வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவரின் நினைவு தூபியில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

அந்தவகையில் தமிழருவி சிவகுமார் சோமசுந்தரப்புலவரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் சொற்பொழிவை மேற்கொண்டார் . ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை என்ற பாடலை விபுலானந்தாக்கல்லூரி மற்றும் தமிழ் மத்திய மகாவித்தியாலய பாடசாலை மாணவர்கள் பாடி மகிழ்வித்திருந்தனர் .

நிகழ்வில் கொழுக்கட்டை, ஆடிப்பிறப்புக்கூழ் என்பனவும் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் எஸ்.ரவீந்திரன், உறுப்பினர்கள் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வி.பிரதீபன், சமூக ஆர்வலர் விக்னா, மாதவன், பொது அமைப்புக்கள் சமூக ஆர்வலர்கள் வர்த்தகர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here