மன்னார் மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு!


வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வருடாந்த ஆடிப்பிறப்பு கொண்டாட்டமானது மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று(16) வியாழக்கிழமை காலை 8 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது.

ஆடிப்பிறப்பின் தந்தை என்று போற்றப்படும் நவாலியூர் சோமசுந்தரம் புலவர் (தங்கத்தாத்தா) அவர்களின் படத்திற்கு மாவட்டச் அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளாலும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலக அலுவலர்களினால் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்னும் பாடலும் இசைக்கப்பட்டது.

நாட்டடில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ் நிலையை கருத்தில் கொண்டு மிளவும் எளிமையான முறையில் சுகாதார நடை முறையினை பின்பற்றி 2020ஆம் ஆண்டுக்கான ஆடிப்பிறப்பு கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here