இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான 2வது தடுப்பு மருந்து; மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனையை தொடங்கியது!


கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவின் சைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கும் கிளினிக்கல் பிரசோதனை தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பாரத் பயோடெக் நிறுவனம் கிளிக்கல் பரிசோதனையை தொடங்கியுள்ள நிலையில், மனிதர்களான மீதான பரிசோதனை நடத்தும் 2வது நிறுவனம் ஜைடல் கேடில்லா நிறுவனமாகும்.

கிளினிக்கல் பரிசோதனையில் முதல் கட்டம் மற்றும் 2வது கட்டத்தை 1,048 பேர் மீது பரிசோதிக்க ஜைடஸ் கேடில்லா மருந்து நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த மாதத் தொடக்கத்தில் அனுமதியளித்தது. இதன்படி இந்த கிளினிக்கல் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய கிளினிக்கல் பரிசோதனை முயற்சியின்படி இரு கட்டங்களாக மருந்தின் தன்மை பரிசோதிக்கப்படும். முதல் கட்டமாக நல்ல உடல் ஆரோக்கியம் கொண்ட 18 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆண், பெண்களைத் தேர்வு செய்யும். இதில் பெண்கள் பாலூட்டும் தாய்களாகவோ, கர்ப்பிணிகளாக இருக்கக்கூடாது.

இந்த மருந்து பரிசோதனைக்கு வரும் தன்னார்வலர்கள் உடலில் மருந்தை செலுத்திக் கொள்ளவும், அதன்பின் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

2வது கட்ட கிளிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர்கள் 12 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தன்னார்வலர்களைத் தேர்வு செய்யும்போது 18 வயது நிரம்பியவர்களாக இருந்தால் அவர்களிடம் மருந்து நிறுவனம் முறையாக ஒப்புதல் பெற வேண்டும், 18 வயது நிரம்பாதவர்களாக இருந்தால் அவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

முதல்கட்ட கிளிக்கல் பரிசோதனை 84 வரையிலும், 2வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை அதிகபட்சமாக 224 நாட்கள் வரையிலும் நடத்தப்படும்.

இந்த தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வர்கள் 4 வாரங்களுக்குள் உடலில் எந்தவிதமான நோய் தொற்றும், காய்ச்சல்(38 டிகிரி முதல் 100.4 பாரன்ஹீட்) வந்திருக்கக்கூடாது. கடந்த 14 நாட்களுக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு வைத்தல், கொரோனா நோயால் பாதிக்கப்படுதல், கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு பரிசோதனையில் பொஸிட்டிவ் வருதல், கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக ஏதாவது கிளினிக்கல் பரிசோதனையில் பங்கேற்று இருத்தல் போன்றவை அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும், மஞ்சள் காமாலை சி,பி வகைகளில் பாதிக்கப்படாமல் இருத்தல், தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள், நாள்ஒன்றுக்கு 10 சிகரெட்டுக்கும் அதிகமாக புகைக்காதவர்கள் போன்றவர்கள் மட்டுமே கிளிக்கல் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here