6 வருட காதலனுடன் சில வாரங்களில் திருமணம்… மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை கைது!


தன்னிடம் கல்வி கற்ற மாணவனுடன் பாலியல் உறவை கொண்டிருந்த பாடசாலை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். மாணவனின் நிர்வாண புகைப்படத்தை அனுப்புமாறு கூறி நச்சரித்த விவகாரத்தில் அவர் சிக்கினார்.

அவுஸ்திரேலியாவில் இந்த சம்பவம் நடந்தது.

மோனிகா எலிசபெத் யங் (23) என்ற ஆசிரியை கடந்த திங்களன்று பாங்க்ஸ்டவுன் உள்ளூர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, அவரது பிணையை நீதவான் நிராகரித்தார்.

14 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவனைபாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியது உள்ளிட்ட 10 குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார்.

ஜூன் 24 மற்றும் ஜூலை 3 ஆகிய திகதிகளில் பாடசாலை நேரங்களில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பான பல குற்றச்சாட்டுகளை நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்தின.

ஜூலை 10 ஆம் திகதி சிட்னியின் வீட்டில் யங் கைது செய்யப்பட்டார். தனது 6 வருட காதலனை திருமணம் செய்ய சில வாரங்களே உள்ள நிலையில் அவர் கைதானார்.

மாணவனின் நிர்வாண புகைப்படத்தை அனுப்பும்படி அவர் கோரிய ஸ்னாப்சட் ஆதாரங்கள் கையளிக்கப்பட்டன.

இந்த விவகாரத்தை தெரிந்து கொண்டதும், தாயார் பொலிசாரிடம் முறையிட்டார். மாணவனின் தாயாரை தொடர்பு கொண்டு, தனது தரப்பை விளக்க முற்பட்டதன் மூலம் வழக்கில் தலையீடு செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

அவர் 3 நாள் விளக்கமறியலில் இருந்த காரணத்தினால், அவரை நிபந்தனை பிணையில் விடுமாறும், அவர் தனது பாட்டியுடன் தங்கியிருப்பார் எனவும் ஆசிரியை தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த விவகாரம் ஊடக வெளிச்சத்திற்கு வந்தமை, பிணையில் சென்றால் சாட்சிகளில் தலையிடலாம் என கூறி பிணை கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதும் ஆசிரியை நடுங்கத் தொடங்கினார். அவரை ஆசுவாசப்படுத்த சிறிது நேரமாகியது குறிப்பிடத்தக்கது.

வழக்கு ஓகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here