நாளை முதல் கண்டிப்பு: சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் தனிமைப்படுத்தல் மையத்திற்கு!

நாளை முதல் சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுவதை பொலிசார் தீவிரமாக கண்காணிப்பார்கள் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் குறித்து பரவும் போலியான செய்திகள் குறித்து விசாரணை நடத்த 3 சிறப்பு வசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு வெளியே இதுவரை 20 தொற்றாளர்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ராஜாங்கணைய பிரதேசத்தை சேர்ந்த 16 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கண்டி பகுதியில் 600 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நாளிதழ் ஒன்றில் இன்று வெளியான செய்தி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

நாளை முதல், சுகாதார நடைமுறை பின்பற்றப்படுவது கடுமையான கண்காணிக்கப்படும் என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here