கனடா- அமெரிக்கா எல்லை மேலும் ஒரு மாதம் மூடப்பட்டிருக்கும்!


கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான எல்லையை ஓகஸ்ட் 21ஆம் திகதி வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த தடை ஜூலை 21 உடன் முடிகிறது.

மார்ச் முதல் எல்லை அத்தியாவசிய போக்குவரத்து மூடப்பட்டு, தற்போது 4 வது முறையாக மூடல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வர்த்தகம் மற்றும் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள், எல்லையின் எதிர்பக்கங்களில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு விலக்கு அளிக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் மற்றும் எல்லை தாண்டிய வருகைகள் தடைசெய்யப்பட்டு உள்ளன.

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களிலும் தொற்று அதிகரிப்பதால், கனடாவின் எல்லையை மூட வேண்டும் என கனடாவின் பல்வேறு மாகாண பிரதமர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொலைபேசியில் எல்லை மூடல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசியதை அடுத்து இந்த புதிய நீட்டிப்பு வந்துள்ளது.

அதன்படி, இருநாடுகளிடையேயான எல்லைகளை மேலும் ஒரு மாத காலத்திற்கு மூடி வைப்பதென- ஓகஸ்ட் 21 வரை- தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here