சிறிதரன் தொட்டிலையும் கிள்ளி, பிள்ளையையும் கிள்ளுகிறார்!

2013 இல் இரணைமடுவில் இருந்து நீர் கொண்டு வருவதற்கான முயற்சி எடுத்த போது அதை தடுத்து நிறுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சிறிதரனே என்று ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் மண்டைதீவில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

ஒரு மனிதனுக்கான அடிப்படை தேவை நீர் ஆகும். இவ்வாறனதொரு நிலையில் இரணைமடு நீர் வடமாகாண மக்கள் அனைவருக்கும் சொந்தம் ஆகும். அதை பிரதேச வாரியாக பார்த்தால் மக்களிடையே ஒரு முரண்பாட்டை தோற்றுவிக்கும். அவ்வாறானதொரு காரியத்தை செய்த சிறிதரன் அவர்கள் இப்போது தீவக பகுதிகளில் மக்களிடம் வந்து தேர்தல் காலத்தில் வாக்கு கேட்பது என்பது குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல் உள்ளது.

இப்போது புதிதாக பதிவியேற்ற அரசாங்கம் விரைவில் இரணைமடு நீரினை இங்கே கொண்டு வருவதற்கான வழிவகை செய்யும் மற்றும் யாழ் மாவட்டத்தில் பாரிய அளவிலான நீர்சுத்திகரிப்பு ஆலை ஒன்று நிறுவப்பட்டு யாழ் மாவட்டம் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். எமது அரசாங்கம் கூறியது போன்று அனைத்து கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வரும்! கொண்டு வந்து சேர்ப்பேன் என்றார்.

– ஊடகபிரிவு-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here