பெரிய பண்டிவிரிச்சான் புனித மரிய கொறற்றி ஆலயத் திருவிழா!

பெரிய பண்டிவிரிச்சான் பங்கின் தாய்க்கோயிலான புனித மரிய கொறற்றி ஆலயத் திருவிழா இன்று புதன் கிழமை (15) காலை 6.30 மணிக்கு அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளாரின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலியின் முடிவில் திருச்சரூப பணியும், திருச்சுரூப ஆசீரும் இறைமக்களுக்கு வழங்கப்பட்டது.

குறித்த திருவிழா திருப்பலியில் புனித யோசேவ்வாஸ் இறையியல் கல்வியகத்தின் இயக்குனர் அருட்தந்தை டெஸ்மன் குலாஸ் அடிகளார், மறைமாவட்ட அன்பியம், பாப்பிறை சபைகளின் இயக்குனர் அருட்தந்தை சவுல்நாதன் அடிகளார் உற்பட அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,பங்கு மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here