மட்டு மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர் நியமனத்திலும் அரசியல் தலையீடு!

இந்திரா மொகனிற்கான நியமன கடிதம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நீதிக்கு புறம்பான பல நடவடிக்கைகளை தமிழ்பக்கம் தொடர்ந்து வெளிச்சமிட்டு வந்தது. அந்தவகையில் தற்போது, உள்ளக கணக்காளர் நியமனத்தில் நடைபெறும் அரசியல் தலையீடுகளை அம்பலப்படுத்துகிறோம்.

மாவட்ட செயலகத்தின் உள்ளக கணக்காளராக பணியாற்றியவர் தேவகாந்தன். அவர் ஓய்வுபெற்று செல்கிறார். வெற்றிடமாகும் உள்ளக கணக்காளர் பதவிக்கு, கிழக்கு மாகாண திறைசேரியில் பணியாற்றும் இந்திரா மோகனை நியமிக்க பொதுச்சேவைகள் ஆணைக்குழு பரிந்துரைத்தது. இதனடிப்படையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சு, அவருக்கான புதிய கடமையேற்கும் கடிதத்தை அனுப்பியிருந்தது.

வரும் 13ம் திகதி கடமையை பொறுப்பேற்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அவருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவரது நியமனத்தை தடுத்து நிறுத்த அரசியல், நிர்வாக தலையீடுகள் அதிகளவில் நடைபெற்று வருவதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

மட்டக்களப்பு சமுர்த்தி திணைக்கள கணக்காளராக இருந்த பஷீர் என்பவரை, உள்ளக கணக்காளராக நியமிக்க அரசில், நிர்வாக தலையீடுகள் நடைபெறுகின்றன. தனக்கு நெருக்கமான பஷீரை உள்ளக கணக்காளராக நியமிக்க பிரதியமைச்சர் அலிசாகிர் மௌலானா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இந்த முயற்சியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரும் பங்கேற்றிருக்கிறார்.

20 வருடமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்குள் பணியாற்றும் பஷீர், முன்னர் சமுர்த்தி திணைக்களத்தில் கணக்காளராக இருந்தவர். அப்போது சமர்த்தி திணைக்களத்தின் மீது ஏராளம் ஊழல் மோசடிகள் சுமத்தப்பட்டிருந்தன. அந்த மோசடிகளிற்கான ஒரு தொகுதி ஆதாரங்களை தமிழ்பக்கமும் வெளியிட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தை ஊழல் கூடாரமாக மாற்றி வைத்திருந்த காலத்தை மீள கொண்டு வரும் முயற்சியா இது?

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி ஸ்ரீநேசன், அலிசாகிர் மௌலானா ஆகியோர் நெருக்கமாக செயற்படுவதை ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறோம்.

மக்கள் பிரதிநிதிகள் இணக்கமாக செயற்படுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், சட்டத்திற்கு புறம்பான நியமனங்களிற்கும், நிர்வாக சீர்கேட்டிற்கும் இரகசியமாக கைகோர்த்து செயற்படுவது சரியா?

இந்திரா மோகனிற்கு வழங்கப்பட்ட நியமன கடிதம்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here