குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,000 ஐ கடந்தது!

நாட்டில் இன்றையதினம் புதன்கிழமை மேலும் 13 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில், 05 பேர் இரணவில வைத்தியசாலையிலிருந்தும், 04 பேர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையிலிருந்தும், 3 பேர் பனாகொட இராணுவ வைத்தியசாலையிலிருந்தும், ஒருவர் மினுவங்கொடை வைத்தியசாலையைிலிருந்தும் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,001 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 2,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 653 பேர் நாடு முழுவதும் உள்ள 08 வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 150 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here