இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பீடிக்கட்டுக்கள் எரிப்பு!

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள் உதவி மதுவரி ஆணையாளரின் பணிப்புரைக்கிணங்க மதுவரித் திணைக்களத்தினரால்   எரித்தளிக்கப்பட்டது

கடந்த 26 ஆம் திகதி இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடிக்கட்டுகள் வடமராட்சி கிழக்குமணற் காட்டுப்பகுதியில் மதுவரித் திணைக்களத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தார்கள் கைது செய்யப்பட்டவர்கள் புகையிலை வரி சட்டத்தின் கீழ்2 லட்சம் ரூபா தண்டம் அற விடப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட 1லட்சத்து 32 ஆயிரம் பீடிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி p.ரகுநாதன்  மதுவரி அத்தியட்சகர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில் மண்ணெண்ணை ஊற்றி எரித்து அழிக்கப்பட்டன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here