20 வருடத்தில் எந்த மேற்கிந்திய வீரரும் எட்டாத டெஸ்ட் புள்ளிகளை பெற்ற ஹோல்டர்!


கடந்த 20 ஆண்டுகளில் எந்த ஒரு மேற்கிந்தியத் தீவுகள் பந்தவீச்சாளரும் அடையாத தரவரிசைப் புள்ளிகளை எட்டி மே.இ.தீவுகள் கப்டன் ஜேசன் ஹோல்டர் ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக சவுதாம்ப்டன் டெஸ்ட்டில் ஜேசன் ஹோல்டர் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது மே.இ.தீவுகளின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 42 ரன்களுக்கு 6 விக்கெட் என்று தன் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சையும் ஹோல்டர் சாதித்தார். அந்த டெஸ்ட்டில் மொத்தம் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு இங்கிலாந்து கப்டன் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை இரண்டு இன்னிங்ஸ்களிலும் கைப்பற்றினார்.

இந்நிலையில் தான் வாழ்நாளின் சிறந்த தரவரிசைப் புள்ளிகளான 862 புள்ளிகளைப் பெற்று ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2000 ஆம் ஆண்டு வோல்ஷ் 866 புள்ளிகளைப் பெற்ற பிறகு 862 புள்ளிகளைப் பெறும் 2வது மேஇ.தீவுகள் பந்து வீச்சாளர் ஆனார் ஹோல்டர்.

துடுப்பாட்ட தரவரிசையில் ஸ்மித் முதலிடம் விராட் கோலி 2ம் இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் துடுப்பாட்டம், பந்துவீச்சில் முதல் 10 இடங்களில் எந்த இலங்கை வீரர்களும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here