ஹக்கீமிற்கு ஏமாற்றுவது கைவந்த கலை; மனைவியையே ஏமாற்றியவர்: ஐ.எம்.ஹாரிப்!

மர்ஹூம் அஸ்ரப்பின் அரசியல் வியூகங்கள் மற்றும் சமூக சேவைகள் வெற்றியளிக்க வழியமைத்துக் கொடுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கத்தில் அஸ்ரப்பின் நற்பெயருக்கும், நட்புறவிற்கும் களங்கத்தினை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு முரணாகவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சாதகமாகவும் செயற்பட்டு, அமைச்சுப் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்டு, அஷ்ரபின் கட்சிக்கு பாரிய அவமானத்தை தேடிக் கொடுத்தவர் ஹக்கீம் என்பது சகலரும் அறிந்த உண்மையாகும். இதிலிருந்து ஹக்கீம் தலைமைத்துவத்தின் ஆரம்பமே, கோணலாகத் தான் இருந்தது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் –

தொடர்ந்து வட கிழக்குக்கு மாகாணங்களுக்கு கேபினெட் அமைச்சினை கொடுக்கக் கூடாது என்ற உபாயத்தினை அரங்கேற்றி, மக்களின் மனங்களில் வேதனைகளை ஏற்படுத்தி, கட்சியின் அழிவுக்கு ஆரம்பப் புள்ளியினை ஹக்கீம் இங்கு தான் இட்டார்.

ஹக்கீம் தலைமைத்துவத்தினை அடைந்த பின் கட்சியின் 23 உயர்பீட உறுப்பினர்களுக்கிடையில் தலைமைத்துவம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவானது, ஹக்கீம் கட்சியில் பெரும்பான்மை ஆதரவினை கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்நிலைப்பாடானது செயலாளர் நாயகம் ஹஸனலியினாலும், தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தினாலும் கடுமையான சிரமத்துக்கு மத்தியில் சரி செய்து மீண்டும் ஹக்கீம் தலைமைத்துவம் பாதுகாத்துக் கொடுக்கப்பட்டது.

இந்நிலைமையினை மாற்றியமைத்து தானே தொடர்ந்து தானைத் தலைவனாக இருக்க வேண்டும் என்பதற்காக, கட்சியில் இருந்து கட்சிப் போராளிகளை, கட்சியை ஆரம்பித்தவர்களை கட்சியை விட்டு வெளியேற்றி, தனது தலைமைத்துவத்தினை நேர்மையற்ற முறையில் தக்க வைக்க கண்கட்டி நாடகங்களை நடாத்தி ஹக்கீம் அவரது சுயநலத்தினை வெளிப்படுத்தினார்.

ஹக்கீமை நம்பி அவரை தலைமைத்துவத்தில் அமர்த்தியவர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்த போதும், அவர்கள் கட்சியையும், ஹக்கீமையும் சமாளிக்கும் வகையில் பொறுமையாக செயற்பட்டு இன்று, நாளை, நாளை மறுநாள் ஹக்கீம் சமூக நீரோட்டத்துக்கு வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஹக்கீமுடன் இருந்து ஹக்கீம் அவரது பிரச்சனைகளையும், கட்சியையும், சமூகத்தையும் பாதுகாத்தே பயணித்தார்கள்.

ஆனால் அவர்களையும் தூக்கி வீசும் மூளை மந்திரத்தில் ஹக்கீம் குறியாக செயற்பட்டதனால், அவர்களும் வெளியேற்றப்பட்டார்கள். இதில் குறிப்பாக செயலாளர் நாயகம் ஹஸனலியும், தவிசாளர் பஷீர் சேகுதாவுதும் முக்கியம் பெறுகின்றனர்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஹக்கீமினை மகுடம் சூட்டி சிம்மாசனத்தில் வைத்து இருந்தார். ஆனால் இன்று அதே ரணிலை தூக்கி வீசி விட்டு சஜித்தோடு சென்றதை எம்மால் இன்று நேரடியாகக் காணக் கூடியதாக உள்ளது. இது ரணிலுக்கு செய்த துரோகத்திலும் துரோகமாகும்.

அதுமட்டுமல்ல தனிப்பட்ட ஒரு சம்பவத்தினால் ஏற்பட்ட பாரிய சிக்கலில் இருந்து ஹக்கீம் முற்றும் முழுதாக காப்பாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவை 52 நாள் அரசாங்கத்தில் நம்ப வைத்து ஏமாற்றியதுக்கான அர்த்தமுள்ள சொல்லினை அகராதியிலேயே தேட வேண்டியுள்ளது.

குமாரியுடன் இருந்த தகாத உறவுக்காக, தனது மனைவி, மக்கள், குடும்பத்தினைக் கூட ஏமாற்றியவர். அதுமட்டுமல்ல என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, என்னுடன் குடும்பம் நடத்தி விட்டு, என்னை ஏமாற்றி விட்டார் என்று தானே, குமாரியும் ஹக்கீமின் வீட்டுக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டாள்.

எனவே ஏமாற்றுவது ஒன்றும் ஹக்கீமமுக்கு புதிய விடயமல்ல, இனிவரும் காலங்களில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மிகுதியாக உள்ள கட்சிப் போராளிகள், எமது சமூகம் போன்றவைகள் மீண்டும் பல முறை ஹக்கீமினால் ஏமாற்றப்படத்தான் போகின்றார்கள் என்பது உறுதி செய்யப்பட்ட ஒரு விடயமாகும்.

இதனை நாங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுதான், ஹக்கீமிடம் இருந்து எமது சமூகத்தினை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இவ்விடுதலைப் போராட்டத்தினை ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஊடாக முன்னெடுக்கின்றோம்.

இத்தருணத்தில் நாம் சகலரும் ஒன்றிணைந்து, முஸ்லீம்களின் படுபாதக பாதாள அரசியலினை செய்யும் ஹக்கீமிடம் இருந்து இச்சமூகத்தினைப் பாதுகாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இத்தேர்தலினை பயன்படுத்தி ஹக்கீமினை ஓரம் கட்ட வேண்டும் என்பது இன்றைய எமது சமூகத்துக்கான அரசியல் விடுதலைக்கு காலத்தின் தேவையாக உள்ளது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here