புதிய கடற்படை தளபதியாக நிஷாந்த உலுகெடென்ன நியமனம்!

புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்தா உலுகெடென்ன இன்று (15) நியமிக்கப்பட்டார்.

முன்னதாக இலங்கை கடற்படையின் தலைமைப் பணியாளராக இவர் பணியாற்றினார்.

கொழும்ர் ரோயல் கல்லூரி மாணவனான இவர், 1985 ஆம் ஆண்டில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் 13 வது பயிற்சி அணியின் கடட் அதிகாரியாக இலங்கை கடற்படையில் சேர்ந்தார்.

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தனது அடிப்படை பயிற்சியைப் பெற்றார். இரண்டு வருட பயிற்சியை முடித்து, 1987 ஜனவரி 05 ஆம் திகதி துணை லெப்டினெண்டாக நியமிக்கப்பட்டார்.

தனது கடற்படை வாழ்க்கையின் போது பல கடல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

கடற்படை தளபதி அட்மிரல் பியால் டி சில்வாஇன்று ஓய்வுபெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here