பரீட்சைகள் திணைக்களத்தின் ஒருநாள் சேவை மூடப்பட்டது!

பரீட்சைகள் திணைக்களத்தின் பொதுச்சேவை துறை மற்றும் ஒருநாள் சேவை என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சுகாதார காரணங்களிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இன்று (15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவை மூடப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தில் சான்றிதழ்கள் பெற வேண்டியுள்ளவர்கள் ஒன்லைன் அல்லது மின்னஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்து 48 மணி நேரத்திற்குள் சான்றிதழ் வீடுகளிற்கு கொண்டு வந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான doenets.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here