தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது: சிறிதரன்!


தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்

நேற்று (14) கிளிநொச்சி வலைப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

நாம் இந்த நாட்டிலே விடுதலை வேண்டி 70ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். ஆரம்பத்தில் தந்தை செல்வா தலைமையில் அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியில் தலைவர் பிரபாகரன் தலைமையிலும் போராடி வந்தவர்கள் தமிழர்கள்

தமிழர்கள் சிங்கள மக்களின் உரிமைகளை பறிப்பதற்காக இந்த மண்ணில் போராடவில்லை. நாம் பூர்விகமாக வாழ்ந்த இந்த மண்ணிலே எமது உரிமைகளை பெறுவதற்காகவே நாம் போராடி வந்திருக்கிறோம் போராடியும் வருகிறோம்
இவ்வாறாக நீண்ட காலமாக இடம் பெற்றுவரும் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்க இந்த அரசு உத்வேகத்துடன் செயற்படுகிறது. வடக்கு கிழக்கு பூராகவும் இராணுவ சோதனை நிலையங்களை நிறுவி சோதனையிட்டு தமிழர்களை தொடர்ந்தும் ஒரு இராணுவ கெடுபிடிக்குள் வைத்திருக்கவே இந்த அரசு செயற்படுகிறது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்

இப் பிரச்சாரக் கூட்டத்தில் வடமகாண முன்னாள்கல்வி அமைச்சர் குருகுலராஜா பச்சிலைப்பள்ளி, கரைச்சி தவிசாளர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here