தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் அடிதடி!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் இருவருக்கிடையில் நேற்று நடைபெற்ற அடிதடியில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவனேசனுக்கும், பத்தாவுக்குமிடையிலேயே இவ்வாறு கடும் மோதல் மூண்டுள்ளது.

நிதி கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் ஏற்பட்டிருந்த முரண்பாடு காரணமாகவே இம்மோதல் இடம்பெற்றுள்ளது என்று ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் காசல்ரீயிலுள்ள விடுதியொன்றில் நேற்று முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர் உதயகுமாரும் கலந்துகொண்டுள்ளார்.

சிவநேசனுக்கும், பத்மாவுக்குமிடையில் நிதி கொடுக்கல், வாங்கல் தொடர்பில் ஏற்பட்டிருந்த சர்ச்சைக்கு முடிவு கட்டி, சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் குறித்த சந்திப்பில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சங்கத்தின் பிரதித் தலைவர் உதயகுமார், பத்மாவை அழைத்துக்கொண்டு வெளியில் வந்துள்ளார்.

அவ்வேளையில் சிவநேசன் தரப்பால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், இதனால் பத்மாவின் சாரதி படுகாயமடைந்தார் எனவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவநேசன் கத்தியை காட்டி மிரட்டியதாகவும் பத்மா தரப்பால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here