கம்பஹா நீதிவான் தனிமைப்படுத்தப்பட்டார்!


கம்பஹா மாவட்ட நீதிமன்ற எண் 02 நீதிமன்ற நீதிவான் உள்ளிட்ட 08 பேர் இன்று (14) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் 6 ஆம் திகதி அதே நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சாட்சியாக சாட்சியமளித்திருப்பது தெரிய வந்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் பயிற்றுவிப்பாளர் ஒருவர் கொரொனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை ஏற்றிச்சென்ற சாரதியும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த சாரதி நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார்.

இதையடுத்தே நீதிவான் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here