விவாகரத்தானவர்களை திருமணம் செய்த பிரபல நடிகைகள்!


நடிப்பாலும், அழகாலும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பிரபல நடிகைகள் சிலர், திருமணம் ஆனவர்கள் மீது காதலவாய்பட்டு, அவர்களையே திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.

அப்படி திருமணம் செய்து கொண்ட ரொப் 5 முன்னணி நடிகைகள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

நடிகை ஸ்ரீதேவி:

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர், மனைவி மோனா கபூரை திருமணம் செய்துகொண்டு, அர்ஜுன் கபூர், அன்ஷுளா என்கிற இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில்… பிரபல நடிகை ஸ்ரீதேவியை காதலிக்க துவங்கினார். பின்னர் இந்த விவகாரம் வெளியே கசிந்த பின், மனைவி மோனாவிடம் இருந்து விவாகரத்து பெற்று ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்யா பாலன்

நடிகை வித்யா பாலன், பிரபல தொழிலதிபர் சித்தார்த் ராய் கபூர் என்பவருடன், ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக அரசால் புரசலாக தொடர்ந்து, கிசு கிசு வந்த நிலையில். அதனை உண்மையாகும் விதமாக அவரையே திருமணம் செய்து கொண்டார் வித்யா. ஏற்கனவே சித்தார்த் ராய் இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்று பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரீனா கபூர்:

நடிகை கரீனா கபூர், ஷாஹித் கபூரை காதலித்து வந்த நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தங்களுடைய காதலை முறித்து கொண்டனர். பின்னர், கரீனா பாலிவுட் திரையுலகில் பீக்கில் இருக்கும் போதே, ஏற்கனவே திருமணம் ஆன நடிகர் சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சைப் அலிகான் 2004 ஆண்டு தன்னுடைய மனைவி அமிதாவிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷில்பா ஷெட்டி:

நடிகை ஷில்பா ஷெட்டி தொழிலதிபர் ராஜ் குந்ராவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் ராஜ் குந்ராவின் முதல் மனைவி கவிதா ஷில்பா ஷெட்டியால் தான் தன்னுடைய வாழ்க்கை பாழானதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரவீனா டாண்டன்:

நடிகை ரவீனா டாண்டன், படப்பிடிப்பின் போது அணில் தடானி என்பவரை சந்திக்க நேர்ந்து காதலிக்க துவங்கினார். பின் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு அழகிய குழந்தைகளும் உள்ளனர். அணில் தடானி ஏற்கனவே விவாகரத்தானவர் மற்றும் சில நடிகைகளின் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here