300 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட முதியவர் மரணம்

300 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இந்தோனேசியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த மாதம் 65 வயது மதிக்கத்தக்க பிராங்கோயிஸ் கமிலி அபல்லோ என்ற நபரை பொலிசார் கைது செய்தனர். அவருடைய அறையில் இருந்த இரண்டு
சிறுமிகளையும் மீட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபர் இந்தோனேசியாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்ததாகவும், அவருடன் நெருக்கமாக இருக்க மறுத்தவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

பிராங்கோயிஸ் மடிக்கணினியில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வீடியோ இருப்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்கிழக்கு
ஆசிய நாட்டிற்கு சுற்றுலா விசாவில் இவர் பல முறை நுழைந்துள்ளார்.

ஜகார்த்தா காவல்துறைத் தலைவர் நானா சுட்ஜானா, இந்த நபர் குழந்தைகளை அணுகி அவர்களிடம் ஆசையாக பேசி அவர்களை கவர்ந்திழுப்பார். அவருடன் நெருக்கமாக இருக்க ஒப்புக்கொண்டவர்களுக்கு 250,000 முதல் ஒரு மில்லியன் ரூபியா வரை கொடுப்பார். (17-20 டொலர்)

அப்படி நெருக்கமாக இருக்க ஒப்புக் கொள்ளாதவர்களை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார். பல ஆண்டுகளாக பிராங்கோயிஸ்
இந்தோனேசிய குழந்தைகளை துன்புறுத்தியுள்ளதாகவும், இதில் பலியானவர்கள் இருக்கலாம் என்று பொலிசார் நம்புகின்றனர்.

இந்தோனேசியாவின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுக்கு இவர் ஆளாகியுள்ளார். சிறையில் ஆயுள் தண்டனை அல்லது துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சிறையில் இருந்த பிராங்கோயிஸ் கழுத்தில் கேபிள் ஒன்றை அழுத்தி பிடித்து, மூச்சுத் திணறி உயிரிழக்கும் வகையில் முயன்றுள்ளார். இதையடுத்து, அதிகாரிகள் அவரை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு உயிரிழந்துள்ளார். இதை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here