கம்பஹா, ஹோமாகமவில் பலர் தனிமைப்படுத்தல்!


கம்பஹா மாவட்டத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த சுமார் 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக செயற்பட்ட ஒருவருக்கும், அவர் பயணித்த வாகனத்தின் சாரதிக்குமே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆலோசகரும், சாரதியும் கந்தக்காட்டிலிருந்த கம்பஹாவிற்கு ஒன்றாக பயணித்துள்ளனர்.

சாரதி, கம்பஹாவின் பல இடங்களிற்கும் சென்றுள்ளார். நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தார்.

ஆலோசகரும் கணேமுல்ல பகுதியில் உள்ள ஒரு தொண்டு இல்லத்திற்கு சென்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

தற்போது 13 குடும்பங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட நபர்கள் இதுவரை சுய-தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹோமாகம பகுதியில் சுமார் 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டு இராணுவ வீரர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து விடுமுறையில் வீடு வந்த திரும்பியவர்கள்.

ஒரு இராணுவச்சிப்பாய் சென்று வந்ததால் ஹோமாகமவில் ஒரு தனியார் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரும், சில பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிப்பாய் நகைக்கடைக்கு சென்றதால்,அங்குள்ள ஊழியர் ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here