2ஆம் கட்ட தபால்மூல வாக்களிப்பு!

எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் கட்ட வாக்களிப்பு இன்று(14) அமைதியான முறையில் நடைபெற்றது.

இதன்படி மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்கள்இ மற்றும் அரச திணைக்களங்களின் மாவட்ட மற்றும் பிரதேச அலுவலகங்களிலும் இந்த வாக்களிப்பு நடைபெற்றது. இதன்போது பொதுசுகாதார துறையினர் சுகாதார முறைகளை கவனிக்கும் பணிகளில் ஈடுபாடு காட்டினர்.இதன்படி கோறளைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை அகியவற்றிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்றது. இதன்போது பப்ரல் தேர்தல் கண்கானிப்பு குழுவினர் தேர்தல் கடைமைகளில் ஈடுபட்டனர்.

இம்மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பிற்காக மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 7342 அரச உத்தியோகத்தர்களும்இ பட்டிருப்புத் தொகுதியில் 3047 அரச உத்தியோகத்தர்களும்இ கல்குடா தேர்தல் தொகுதியில் 2426 அரச உத்தியோகத்தர்களுமாக மொத்தம் 12815 பொலிஸ் மற்றும் முப்படையினர் அடங்களான அரச உத்தியோகத்தர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கமைய தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அலுவலர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்காக 14இ 15 ஆந்திகதிகள் தத்தமது அரச காரியாலயங்களிலும் மற்றும் மாவட்ட செயலகங்கள்இ தேர்தல் அலுவலகங்கள்இ பொலிஸ்இ முப்படை சிவில் பாதுகாப்பு படை உட்பட சுகாதார துறையினர் எதிர்வரும் 16இ 17 ஆந்திகதிகளில் நள்ளிரவு 12.00 மணிவரையும் வாக்களிக்க முடியுமெனவும்இ இத்தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தாம் சேவைபுரியும் நிலையம் அமைந்துள்ள மாவட்ட செயலகங்களில் அல்லது மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் 20இ 21 வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக தபால் திணைக்களத்திற்கு எதிர்வரும் 11இ 12இ 13 ஆந் திகதிகளில் கையளிக்கப்படவுள்ளதுடன்இ வாக்காளர் அட்டைகள் வீடு வீடாக விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 29 ஆந் திகதிவரையும் இடம்பெறும் எனவும் வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் 29ஆந் திகதிக்குப்பின் தபால் அலுவலகங்களில் தத்தமதுஅடையாளத்தினை உறுதிப்படுத்தி வாக்காளர்அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here