தேவையில்லாமல் ஒன்றுகூட வேண்டாம்!


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ​வேரஹெர அலுவலகத்துக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தைப்​ பெறுவதற்காக தேவையில்லாமல் ஒன்று கூட வேண்டாமென போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒரு நாளைக்கு 1300 பேர் மாத்திரமே இங்கு சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில், நேற்று (13) மாத்திரம் 3,500 பேர் வேரஹெர அலுவலகத்துக்கு வருகைத் தந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here