கல்முனை பிரச்சார கூட்டத்தில் ஹக்கீம்!


ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் திகாமடுல்லவில் போட்டியிடும் ஸ்ரீ்லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிநிதிகளை ஆதகரித்து முன்னாள் இராஜாங்க அமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட தொலைபேசி சின்ன வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் கல்முனை கடற்கரை வீதீயில் உள்ள திடலில் நேற்று (14) மாலை நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், முன்னாள் நகர திட்டமிடல், நீர்வளங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சமகால அரசியல் நடவடிக்கைகள் சம்மந்தமாகவும் தேர்தல் விடயங்கள் சம்மந்தமாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர், பொத்துவில் பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் வேட்பாளாருமான எம்.எஸ்.எம் வாசீத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான எம்.ஐ.எம் மன்சூர், கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர்,கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல் அமானுல்லாஹ், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல், முன்னாள் மாகாண அமைச்சர் எம். எஸ் உதுமாலெப்பை, கல்முனை மாநகர சபை, நாவிதன்வெளி, காரைதீவு, அட்டாளைச்சேனை பிரதேச சபை போன்ற சபைகளின் உறுப்பினர்கள் அடங்கலாக அக்கட்சியின் முக்கியஸ்தகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here