புலிகளின் பெருந்தொகை பணமும், நகையும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா?: நள்ளிரவில் பூசாரியுடன் புகுந்த பொலிசாரால் பரபரப்பு!

மன்னார் பேசாலை கடற்கரை வீதியில் உள்ள வீடு ஒன்றில் மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சி தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் திடீரென நுழைந்து அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ளமையினால் போசாலை கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது.

மன்னார் பேசாலை கடற்கரை வீதியில் பழமை வாய்ந்த மாடி வீடு ஒன்று உள்ளது. குறித்த வீட்டின் மேல் பகுதியில் குடும்பம் ஒன்று வசித்து வருகின்றது.

இந்த நிலையில் குறித்த வீட்டின் கீழ் பகுதியில் புலிகளின் தங்கம் மற்றும் பெறும் தொகையான நகைகள் புதைத்து வைத்துள்ளதாக தெரிவித்து மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சி தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் வீட்டினுள் நுழைந்துள்ளனர். அனுமதியில்லாமல் திடீரென தமது வீட்டுக்குள் நுழைந்தமைக்கு வீட்டில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வீட்டிலிருந்தவர்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் இந்த இருவர் திடீர் என மயக்கம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் பொலிஸாருடன் வருகை தந்த பூசாரி ஒருவரும், ஏனையவர்களும் இணைந்து குறித்த வீட்டின் உள் பகுதியில் தரையை உடைத்து அகழ்வு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பேசாலை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்ததுடன், அகழ்வு பணிக்கான நீதிமன்ற அனுமதியை காட்டுமாறு கோரினார். பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சி தலைமையிலான குழுவினர் வீட்டில் ஆயுதம் உள்ளதாக கூறி குறித்த வீட்டில் உள்ள ஒருவரை கைது செய்து சென்றுள்ளனர்.

நீதிமன்றத்தின் அனுமதி இன்றி பேசாலை பொலிஸாருக்கு ஆரம்பத்தில் தகவல் வழங்காது இரகசியமான முறையில் இரவு நேரத்தில் வந்து குறித்த பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசாலை மக்கள் அதிருப்பி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இன்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்துக்குரிய வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here