சோதனைச்சாவடியை மோதி விட்டு டிப்பர் தப்பித்தது: பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

ஹக்மன, கொங்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடி மீது வேகமாக வந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி 36 வயதுடையவர் ஆவர்.

விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் வாகனம் தப்பிச் சென்றுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here