நேற்று 29 பேருக்கு தொற்று!


கந்தக்காடு போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்திலிருந்து இதுவரை மொத்தமாக 517 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய நிலவரத்தின்படி அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி கந்தக்காடு மற்றும் சேனாபுர நிலையங்களில் 440 கைதிகள், 47 ஊழியர்கள் மற்றும் நிலையத்தில் கைதிகளுடன் தொட்புகளை பேணிய மேலும் 30 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 29 ஆகும். இதன் மூலம் நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2,646 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,981 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேநேரம் கொரோனா 654 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 112 பேரும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here