இன்று 14 பேருக்கு கொரோனா… அநுராதபுரத்தின் 3 பிரதேசங்களில் நடமாட்ட கட்டுப்பாடு!

இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதியொருவர் கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்ட பின்னர் 492 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு பெற்று வந்த 429 பேரும், ஊழியர்கள் 47 பேரும், அவர்களுடன் தொடர்புகளை பேணிய 16 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

இதேவேளை, அநுராதபுரத்தின் ராஜாங்கணைய பிரதேசத்தில் 1,3,5ஆம் பகுதிகளில் நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here