சாய்ந்தமருது குண்டுத்தாக்குதல் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

கடந்த வருடம் சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, சாய்ந்தமருது பகுதியில் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. இதன்போது களுவாஞ்சிக்குடி குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் அபூபக்கர் என்பவரே கைதாகியிருந்தார்.

சாய்ந்தமருது தாக்குதல் விவகாரத்தின் பின்னர் அவர் அம்பாறை மாவட்ட பொலிஸ் வாகன பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தார்

இன்று களுவாஞ்சிக்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து, கொழும்பிலிருந்து வந்த சிஐடியினரால் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here