விக்னேஸ்வரனே என்னை பிணையில் விடுவித்தார்; அந்த அபிமானமே அவரை முதலமைச்சராக்க காரணம்: மனம் திறந்த மாவை!

மட்டக்களப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதால் நான் கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்பட்டிருந்தேன். க.வி.விக்னேஸ்வரன் திருகோணமலைக்கு நீதிபதியாக வந்த பின்னரே எனக்க பிணை வழங்கப்பட்டது. அந்த அபிமானத்தினாலேயே அவரை வடக்கு முதலமைச்சராக்க சம்மதித்தேன் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.

இன்று தமிழ்பக்கத்தில் ஒளிபரப்பான பேஸ்புக் நேரலையான- “எதுக்கு என்ன பாத்து இந்த கேள்வியை கேட்டாய்?“ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு மாற்றத்திற்கு எதிராக மட்டக்களப்பில் 1978 செப்ரெம்பரில் பெரும் போராட்டம் நடந்தது. நானும் இங்கிருந்து சென்றேன். ஆயிரம் ஆயிரமாக மக்கள் திரண்டார்கள். பலர் கைது செய்யப்பட்டனர். அரசியல் யாப்பை ஏற்கவில்லை, தமிழீழத்தை அடைய முயற்சிக்கிறோம் என கைது செய்யப்பட்டோம்.

முதல் இருந்த நீதிபதி எங்களிற்கு பிணையையே மறுத்து விட்டார். எங்களிற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் வாதாடினார்கள். ஆனால் நீதியரசர் விக்னேஸ்வரன் எமக்காக வாதாடினார். எம்மை பிணையில் விடுவித்தார்.

அவரை முதலமைச்சராக்குவதென்றபோது, இந்த அபிமானத்தால் ஏற்றுக்கொண்டேன்.

தானே எம்மை பிணையில் விடுவித்ததாக அவர் அண்மையிலும் கூறியிருந்தார்.

அவர் அண்மையில் இன்னொன்றையும் கூறியிருந்தார். கடந்த அரசில் கன்னியா வெந்நீரூற்றை கூட்டமைப்பு விற்றுவிட்டது, இம்முறை வாக்களித்தால் கோணேச்சரத்தையும் விற்றுவிடும் என கூறியுள்ளார்.

அவர் நீதியரசராக இருந்தவர். படித்தவர். பண்பானவர். உயர்ந்த மனிதராக மதிக்கப்பட்டவர். அவர் இந்த சொற்களை பாவித்தது நல்லதல்ல.

பிறிதொரு கேள்விக்கு பதிலளிக்கையில், விக்னேஸ்வரனை முதலமைச்சரக தெரிவு செய்த முடிவு தவறானதென தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்பொழுது உணர்கிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here