இதை செய்தால் ராகுதோஷம் உடனே நீங்கிடும்

0

கிரகங்கள் பொதுவாக தன்னுடைய குணத்தின் அடிப்படையிலும் தான் சென்று தங்கும் கிரக வீடுகளின் குணங்களின் அடிப்படையிலுமே நமக்கு நன்மைகளையும் தீமைகளையும் வழங்குகின்றன. அதில் கிரகங்கள் நன்மையைச் செய்தால், கிரக பலன்கள் என்றும் கெடுதல்களைச் செய்தால், தோஷங்கள் என்று குறிப்பிடுகிறோம். இந்த தோஷங்களில் மிக அடிப்படையானதும் கடுமையானதுமாக இருப்பது ராகு- கேது தோஷங்கள் தான். ராகு- கேது தோஷங்கள் பற்றியும் அவற்றிற்கான பரிகாரங்கள் பற்றியும் இங்கு பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியவை முக்கியமான கிரகங்கள் ஆகும். ராகு-கேது இரண்டும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும். ராகு-கேது பற்றி பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. ராகு மற்றும் கேது இருவரும் செய்த தவ வேள்விகளால் மகிழ்ந்த பரமேஸ்வரனும், விஷ்ணுவும், நவகிரக பரிபாலனம் செய்யும் பாக்கியத்தை, அந்தஸ்தை அவர்களுக்கு அளித்தனர். ஒருவரது முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு-கேது இருவரும் வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அவரவர் செய்த வினைப்பயனின் அடிப்படையில் தான் ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் அமைவார்களாம்.

ராகு-கேது இருவரும் எந்த கிரகங்களின் வீட்டில் அமர்ந்து இருக்கிறார்களோ அந்த கிரகத்தின் தன்மையை பிரதிபலிப்பார்கள். அவர்கள் எந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் இருக்கிறார்களோ அந்த நட்சத்திர கிரகத்திற்கு ஏற்ப தான் பலன்களைத் தருவார்கள். அதுமட்டுமின்றி, அவர்களுடன் சேர்ந்த கிரகம், அவர்களைப் பார்க்கும் கிரகம் ஆகியவற்றின் பலன்களையும் சேர்த்துத் தருவார்கள். பொதுவாக சுக்கிரன் வீடான ரிஷபத்தில் இருந்தால் சுக்கிரனின் அம்சமாக பலன்களைத் தருவார்கள். சந்திரனின் வீடான கடகத்தில் இருந்தால் சந்திரனின் பலன்களைத் தருவார்கள்.

எந்தெந்த ராசிக்கு பலன்திருமண தோஷம் இருக்கிறது என்று கோவில் கோவிலாக சுற்றி வருபவர்களைப் பார்த்திருப்போம். அதற்கும்இந்த ராகு-கேது தான் காரணம். இரண்டாம் இடமான தனம், வாக்கு ஆகியவை குடும்பஸ்தானத்தில் இருந்தால் திருமண தோஷத்தைத் தருவார்கள். ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்தால், களஸ்திர தோஷத்தைத் தருவார்கள். பெண்கள் ஜாதகத்தில் எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தில் இருந்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும். ஐந்தாம் இடமான புத்திரஸ்தானத்தில் இருந்தால் புத்திர தோஷத்தைத் தருவார்கள்.

அதேபோல, மிகப்பெரிய ராஜயோகத்தை தரக்கூடிய வல்லமை ராகு-கேது இருவருக்கும் உண்டு. கேதுவின் தயவு இல்லாமல் யாரும் கோடீஸ்வரர் ஆக முடியாது. கேது ஞானத்தையும், யோகத்தையும், மோட்சத்தையும் ஒருங்கே தரக்கூடிய கிரகம். பொதுவாக லக்னத்திற்கு 3, 5, 6, 9, 10, 11 வீடுகளில் உள்ள ராகு-கேது காலசர்ப்ப ராஜயோகத்தை தருவார்கள். திடீர் தனயோகம், பட்டம், பதவி, எதிர்பாராத வளர்ச்சி, செல்வம், திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றை தருவதில் ராகு-கேதுக்கு நிகர் யாருமில்லை எனலாம். கல்வி அறிவு தருவதில் ராகு-கேது மிக முக்கியமானவர்கள். லக்னத்திற்கு ஒன்பதாம் இடம் கடகம் அல்லது மகர ராசியாக இருந்து அதில் ராகுவோ, கேதுவோ இருந்தால் ஏட்டுக்கல்வி தவிர, அனுபவ அறிவும், எதையும் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டு செயலாற்றுகிற ஆற்றலும், புத்தி சாதுர்யமும் வெளிப்படும்.

எந்தெந்த ராசிக்கு பலன்

ராகுவும் கேதுவும் மேஷம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிகளில் இருக்கும்போது நல்ல பலன்களைத் தருவார்கள். அதேபோல் கடகம் மற்றும் மகர ராசிக்கும் இது பொருந்தும்.இவையிரண்டும் ஜலராசிகள் என அழைக்கப்படும். இவற்றை கடக ஆழி என்றும் மகர ஆழி என்றும் அழைப்பார்கள். இந்த இரண்டு ஆழிகளிலும் தான் நான்கு வேதங்களும் இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

ராகு தோஷம்

ராகு தோஷத்தால் தொழில், கல்வி, செல்வம், ஆகியவற்றில் தேக்க நிலை உண்டாகும். உடல் நலத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். அதைவிட குறிப்பாக, திருமண தோஷம், களத்திர தோஷம் என எல்லா வகையான தோஷங்களுக்கும் இந்த ராகு, கேது தான் அடிப்படையாக அமைகின்றன. அதற்கென சில குறிப்பிட்ட பரிகாரங்கள் இருக்கின்றன. அதை முழு மனதோடு செய்தால் தோஷங்கள் விலகி, நன்மை பெருகும்.

பரிகாரம் 1

ராகு திசை நடப்பவர்களும் ராகுவுக்கு கிரக பரிகாரம் செய்ய நினைப்பவர்களும் ராகு பகவானை கோமேதகக் கல்லினை ஆபரணங்களில் சேர்த்து அணிந்து கொண்டு, சனிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டும். பின், அருகில் உள்ள ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகத்தில் ராகுவின் முன் நெய் தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தொடர்ந்து கால் மண்டலம் (அதாவது 12 சனிக்கிழமை) செய்து வர வேண்டும். ஒருவேளை இந்த விரதத்தை பெண்கள் இருந்தால், மாதவிலக்கு சமயங்களில் வீட்டிலுள்ள யாராவது அவர்களுடைய விரதத்தை கடைபிடித்துக் கோவிலுக்குச் செல்லலாம்.

பரிகாரம் 2
பரிகாரம் 2

7 ஆம் இடத்தில் ராகு இருந்தால் அது மிகக்கடுமையான திருமண தோஷம் ஆகும். எவ்வளவு முயன்றாலும் திருமணம் தடைபட்டுக் கொண்டேதான் இருக்கும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு ஒன்பது வாரங்கள் எலுமிச்சை விளக்கை ஏற்றி வந்தால், திருமண தோஷம் விலகி, திருமணம் கை கூடி வரும் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.

பரிகாரம் 3பரிகாரம் 3

கடுமையான ராகு தோஷம் நீங்க வேண்டுமானால், ஈய விக்கிரகம், கோமேதகம், எருமை, பூமி தானம், குடை, எண்ணெயுடன் பாத்திரம், உளுந்து, செந்தாமரை மலர் ஆகியவற்றை ஏதேனும் ஒரு சுப நாளில் தானம் செய்தால் எவ்வளவு கடுமையான ராகு தோஷமாக இருந்தாலும் பனிபோல விலகிவிடும்.