பூநகரியில் சந்திரகுமாரின் பிரமாண்ட பொதுக்கூட்டம்!

சுயேச்சைக் குழுவாக கேடயச்சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிர் மு. சந்திகுமாரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பூநகரி வாடியடிச் சந்தியில் நேற்று (12) மாலை மூன்று பெரும் திரளான மக்கள் அடுக்கு மத்தியில் இடம்பெற்றது.

யாழ் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையிலான அணியினரின் பூநகரி பிரதேசத்திற்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டமே நேற்று மாலை இடம்பெற்றது. பூநகரியின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொண்டனர்.

இங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை முன்னாள் நிர்வாக பொறுப்பாளாரும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான மணியண்ணன், ஓய்வுப்பெற்ற கிளிநொச்சி கரைச்சிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.அமிர்தலிங்கம், கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் சமாசத் தலைவர் ஜோசப் பிரான்சிஸ், ஜெயபுரம் பிரதேச சிவில் சமூக பிரதிநிதி இராஜரட்ணம், கரைச்சி, பூநகரி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கில் இடம்பெற்றுவரும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பெருமளவு மக்கள் பங்கேற்புடன் நடந்த கூட்டமாக இது கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here