இளவாலை வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேவில் பகுதியில் ஒரு வகை வெடிபொருளை வெட்ட முற்பட்டபோது வெடித்து சிதறியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 3 பேர் உள்ளிட்ட 4 பேரை இளவாலை பொலிசார் கைது செய்தனர்.

காணியொன்றிலிருந்து வெடிபொருளை எடுத்து வந்து கழுவி சுத்தம் செய்த பின்னர், வெட்ட முற்பட்டபோது அது வெடித்து சிதறியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், விசாரணைகளை மேற்கொண்டனர்.

வெடிபொருட்களை எடுத்து வந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இன்று அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here