வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 29 பேர்விடுவிப்பு!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 29 பேர் இன்றயதினம் விடுவிக்கப்பட்டனர்.

கோவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது .

அந்தவகையில் கடந்தமாதம் யூன் 26ஆம் திகதி பங்களாதேஸ் நாட்டிளிலிருந்து அழைத்து வரப்பட்ட பலர் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாம்களிற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில், இன்றயதினம் விடுவிக்கப்பட்டனர், 29 பேர் அவர்களது சொந்த இடங்களான கொழும்பு மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களிற்கு பேருந்துகள் மூலம்  அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here