குண்டசாலையில் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கண்டி, குண்டசாலை பகுதியில் சுமார் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் பணியாற்றிய ஆலோசகர் ஒருவர் குண்டசாலையை சேர்ந்தவர். அவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ அதிகாரியான அவர் கடந்த ஜூன் 25ஆம் திகதி விடுமுறையில் குண்டசாலைக்கு சென்றிருந்தார். ஜூலை 6ஆம் திகதி முகாமிற்கு திரும்பினார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசொதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

ஆலோசகர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுடன் நெருங்கிப் பழக்கியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here