கச்சேரிக்கு முன் வாள்வெட்டு: சிக்கினார் சூத்திரதாரி; இராணுவத்தில் இருந்து விலகியவராம்!

யாழ் மாவட்ட செயலக வாயிலில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தின் பிரதான சூத்தரதாரி என கருதப்படும் பிரபல ரௌடி நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

அவர் முன்னர் இராணுவத்தில் பணியாற்றி, விலகியவர் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மாட்ட செயலகத்தின் சுற்றுச்சூழல் அதிகாரசபை உத்தியோகத்தர் பொன்னம்பலம் பிரகாஸ் என்பவர் மீது அண்மையில், மாவட்ட செயலகத்தின் முன்பாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

அவரை பின்தொடர்ந்து வந்த 4 ரௌடிகள், மாவட்ட செயலக வாயிலில் வைத்து வாள்வெட்டை நடத்தினர். கையில் காயமடைந்த உத்தியோகத்தர் அலறியபடி மாவட்ட செயலகத்திற்குள் பாதுகாப்பு தேடி ஓடினார். இரண்டு ரௌடிகள் மாவட்ட செயலக வளாகத்திற்குள் புகுந்து அவரை விரட்டி வெட்டியதுடன், இன்னொருவரின் மோட்டார் சைக்கிளையும் சேதமாக்கினர்.

துரிதமாக செயற்பட்ட பொலிசார் 6 ரௌடிகளை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நீர்வேலி கரந்தாயில் உள்ள வீடொன்றை சோதனையிட்டபோது, கைக்குண்டு, இராணுவச்சீருடை, தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவை மீட்கப்பட்டன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என கருதப்படுபவரை பொலிசார் தேடி வந்தனர். அவர் நேற்று இரவு சிக்கினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here