ஸ்வப்னா சுரேஷ் கைது!

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபராகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று (சனிக்கிழமை) கைது செய்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு வந்த பார்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டறிந்தனர்.

இந்த வழக்கை விசாரிக்கும் என்ஐஏ, சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ், பாஸில் ஃபரீத், சந்தீப் நாயர் ஆகிய 4 பேர் மீது பயங்கரவாதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) வழக்குப்பதிவு செய்தது.

இந்த நிலையில், இவ்வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை பெங்களூருவில் வைத்து என்ஐஏ கைது செய்துள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்வப்னா சுரேஷ் கொச்சியிலுள்ள என்ஐஏ அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதனிடையே இந்த வழக்கின் மற்றொரு முக்கிய நபராகக் கருதப்படும் சந்தீப் நாயரையும் என்ஐஏ கைது செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here