சனச வங்கி நிதி மோசடி: 6 பேருக்கு விளக்கமறியல்!

2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரையான காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் சனச சங்கத்தில் இருந்து 708 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சங்கத்தின் முன்னாள் பிரதி பொது முகாமையாளர் மற்றும் முன்னாள் பணிப்பாளர்கள் 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

55, 62, 65, 75, மற்றும் 81 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here