மஞ்சள் தூளில் கலப்படம் செய்யும் மஸ்கெலியா வர்த்தகர்கள்!

மஸ்கெலியா நகரில் உள்ள சில வர்த்தக நிறுவனங்களில் விநியோகிக்கப்பட்டு வரும் மஞ்சள் தூள் பக்கட்டுகளில் கோதுமை மா கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணத்தால் மஞ்சள் தூளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் அதற்கான விலையும் அதிகரித்திருந்தது .

சில வர்த்தகர்கள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி விலையை தமக்கு ஏற்றவாறு அதிகரித்தும் கலப்படம் செய்தும் மக்களை சுரண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

அந்த வகையில் நேற்று (10) மஸ்கெலிய நகரில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக சென்ற பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில், “வர்த்தக நிலையம் ஒன்றில் தாம் கொள்வனவு செய்த 50 கிராம் மஞ்சள் தூள் பக்கற்றில் பொதி செய்யப்பட்ட மஞ்சள் தூளை சமையலுக்கு பயன்படுத்திய போது அதன் சுவை வித்தியாசமாக காணப்பட்டதாகவும் அதனை பரிசீலனை செய்து பார்த்தபோது அதில் கோதுமை மா கலப்படம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது .மேலும் குறித்த மஞ்சுள் தூளின் நிறமும் வழமையாக வாங்கும் மஞ்சள் தூளைவிட வித்தியாசமாக காணப்பட்டதாகவும் சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும் குறித்த மஞ்சள் தூள் பொதிசெய்யப்பட்ட நிறுவனத்தின் பெயர் பதிக்கப்படவில்லை 50 கிராம் மஞ்சள் தூளின் விலை 150/_ ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here